முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடிஅழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வு முறை பயிற்சி பட்டறை தொடக்க விழா:

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி: -காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை மற்றும் புதுடெல்லி இந்திய சமூக ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான ஆய்வு முறை பற்றிய 10 நாள் பயிற்சி பட்டறையின் தொடக்க விழா  நேற்று நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை கருத்தரங்க அறையில் நடைபெற்றது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து 30 முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கின்றனர்.

அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியரும் இப்பயிற்சி பட்டறையின் இயக்குநருமான கா.மணிமேகலை இவ்விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.  அவர் தனது உரையில் இந்த பயிற்சியின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். ஆய்வு மாணவர்கள் ஆய்வைப் பற்றிய முழுமையான அறிவை இந்த 10 நாள் பயிற்சி பட்டறை மூலம் பெறுவர் என்று கூறினார். சமூகவியல் ஆராய்சிக்குப் பயன்படும் புள்ளியியல் தொகுப்பு மற்றும் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை தெளிவாக எழுதுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும் என்றார். மேலும் சமூக ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில் ஆராய்ச்சி முடிவுகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பெற்று திட்டங்கள் மூலமாக சமூக மாற்றத்திற்கு வழி வகுக்கின்றன என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா அவர்கள் தலைமை வகித்தார். அவர் தமதுரையில் ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த பயிற்சிப் பட்டறை அமைந்துள்ளது என்றார். தலைப்பை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்; என்றும், முந்தைய ஆராய்ச்சிகளைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு, இதுவரை அனுகாத சமுதாயத்திற்கு உதவுவதாக உள்ள ஒரு தலைப்பைத் தெளிவு செய்து தீவிரமாக ஆய்வு செய்தல் மிக மிக முக்கியம் என்றார். இந்த 10 நாள் பயிற்சி பட்டறையில்; ஆராய்ச்சியின் முக்கிய பகுதிகளான முந்தைய ஆராய்சிகள் பற்றிய தெளிவு, ஆய்வுக்கான மாதிரிகளை தேர்வு செய்வது மற்றும் ஆராய்ச்சியின் ஒவ்வொரு படிநிலையையும் தெரிந்து கொண்டு முழு ஈடுபாட்டுடன் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றார். சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளைக் களைவதற்கு ஏற்ற வகையில் சமூகவியல் ஆய்வுகள் அமைய வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினராக மனோன்மனியம் சுந்தரனார் பல்ககை;கழக துணைவேந்தர் பேரா.கே.பாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு முக்கிய உரை ஆற்றினார். அவர் தமது உரையில் அறிவியல் ஆராய்ச்சி என்பது தொழில்  நுட்ப வளர்ச்சிக்கும், சமூக ஆராய்ச்சி என்பது சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கிறது என்றார். சமுதாய பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கான சரியான தீர்வுகளை காண்பது என்பது ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். சமுதாய முன்னேற்றத்தில் ஆய்வு மாணவர்களுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. ஆகவே அவர்கள் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். திருநங்கையர்கள், சமூகத்தில் உண்மையிலேயே பின்தங்கிய நிலையில் உள்ள பிரிவினர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவான சமூக ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  ஆய்வு மாணவர்கள் தரமான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று தம் கருத்துரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் மகளிரியல் மையத்தின் இணை ஆய்வாளர் முனைவர் என்.கே. புவனேஸ்வரி நன்றி கூறினார். பேராசியர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆராய்ச்சி மாணவ, மாணவிகள், ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago