எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காற்று மாசுபடுதல், மக்களின் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் பல காரணங்களால் இந்தியாவில் நாள்தோறும் பலதரப்பட்ட நோய்கள் பெருகி வருகின்றன. பெரும்பாலான சுவாச நோய்களுக்கு விழிப்புணர்வு இல்லாததே முதன்மை காரணமாக உள்ளது. உலக சுகாதார மையத்தின்படி 300 மில்லியனுக்கும் அதிகமானோர் தற்போது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவை பொருத்தவரை 15-20 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 17 சதவீத மக்கள் ஆஸ்துமாவினால் இறந்ததாகவும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளில் 5-11 வயதுள்ளவர்களில் 15 சதவீதம் பேர் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர்.வேல்குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், மதுரையில் நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, காசநோய், நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் தழும்பு நோய், நுரையீரல் புற்றுநோய், குழந்தைகளுக்கான ஆஸ்துமா போன்றவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆஸ்துமாவின் சிகிச்சைக்கு இன்ஹெலர் மருத்துவமுறையே சிறந்ததாக கருதப்படுகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன் இன்ஹெலர் மருத்துவமுறை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே இருந்தது.
ஆஸ்துமாவின் அறிகுறிகள் : ஆஸ்துமாவின் அறிகுறிகள் : சுவாசத்தை வெளிவிடும்போது மெல்லிய அல்லது சற்று அதிக சப்தத்தில் விசில் சப்தம் கேட்கும். சாதாரணமாக நிற்காத இருமல் ஏற்படும். பொதுவாக இரவில் அதிகம் இருக்கும்.
உங்கள் மார்பைச்சுற்றி ரப்பர்பாண்ட்களை இறுக்கியது போன்ற உணர்வோ அல்லது எரிச்சல் உணர்வோ ஏற்படும். ஒரு ஸ்ட்ரா மூலம் சுவாசிக்க முயல்வது போலவோ, அதிலும் மோசமாகவோ நிலைமை இருக்கும். நீங்கள் சுவாசத்தை உள்ளிழுக்க முடியாது. அதே நேரத்தில் சுவாசத்தை வெளிவிடுவது அதைவிட மிகக் கடினமாக தோன்றும்.
இன்று உலக ஆஸ்துமா தினம். பிரதி ஆண்டு மே மாதம் முதல் செவ்வாய்கிழமை உலக ஆஸ்துமா தினமாக கருதப்படுகிறது. மக்களுக்கு ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆஸ்துமா நோய்களை கண்டறியவும், ஆஸ்துமா நோயாளிகளை 50 சதவீதமாக குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும் முக்கிய நோக்கமாகும்.
சிகிச்சை முறைகள் : தினமும் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். நோயின் காரண காரியத்தை அறிந்து முழுமையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியான மருந்து உட்கொள்ளுதல், உணவு பழக்கவழக்கங்கள், ஒழுங்கான வாழ்க்கை முறை, வெளியில் அதிகளவு உணவு உண்ணமால் இருப்பது, முறையாக இன்ஹெலரை பயன்படுத்துவது இவை மூலமாக கண்டிப்பாக ஆஸ்துமாவை குணப்படுத்துலாம்.
இதுவரை 3000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும் ஆஸ்துமா நோய் தொற்று நோயல்ல. முறையான மருத்துவத்தினாலும், மூச்சுப்பயிற்சி, தினமும் உடற்பயிற்சி செய்வதினாலும் இந்நோயை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


