முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 மாவட்டங்களில் ரூ.63 கோடி மதிப்பில் நிறைவு பெற்ற 22 திட்டப்பணிகள் முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 3 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பல்வேறு துறைகள் சார்பில் 62 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவுற்ற 22 திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று துவக்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிருஷ்ணகிரி நகராட்சியில் 37 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 24 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 20 நிறைவுற்ற திட்டப் பணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் புதுக்கோட்டை - காட்டுபுதுக்குளத்தில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி - சென்னை
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிருஷ்ணகிரி நகராட்சியில் 37 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.  மேலும், நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சியில் 3 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்; பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இராயபுரம் மண்டலத்தில் 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை உருது பெண்கள் நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள்; திரு.வி.க.நகர் மண்டலத்தில் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய நல மருத்துவமனை மற்றும் வெங்கடா சமாதி தெருவில் 1 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள்; தேனாம்பேட்டை மண்டலம்-மெக்காபுரம் பிரதான சாலையில் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்; வளசரவாக்கம் மண்டலம்-காரம்பாக்கம் பொன்னி நகரில் 54 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் 150வது வார்டிற்கு கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டிடம்; அடையாறு மண்டலம்-மடுவன்கரை ஐந்து பர்லாங் சாலையில் 1 கோடியே 58 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் மற்றும் 174வது வார்டிற்கு கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டிடம்;

திருச்சி - திண்டுக்கல்
சோழிங்கநல்லூர் மண்டலம்-நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்; நகராட்சி நிர்வாகம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை நகராட்சியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்; திண்டுக்கல் மாநகராட்சியில் 90 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டிலான உயிரி எரிவாயு கலன்;  கடலூர் நகராட்சியில்  50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடற்றவர்களுக்கான இரவு தங்கும் விடுதி; பேரூராட்சிகள்  நிர்வாகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேரூராட்சியில்  50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துப்புரவு பணியாளர் குடியிருப்பு வளாகம்; 

நாமக்கல் - நெல்லை
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பேரூராட்சியில் 75 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி;  வேலூர் மற்றும் சேந்தமங்கலம் பேரூராட்சிகளில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடைகள்; நாமக்கல் மாவட்டம், மோகலூர் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வாரச்சந்தை கடைகள்; திருவாரூர் மாவட்டம், பேரளம் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடப்பட்டுள்ள பாலம்; திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை மற்றும் திருவேங்கடம் பேரூராட்சிகளில் 1 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டிடங்கள்; திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் பேரூராட்சியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம்; என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 61 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவுற்ற 21 திட்டப்பணிகள்;
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் புதுக்கோட்டை நகரம் – காட்டுபுதுக்குளத்தில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடம்; என மொத்தம் 62 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 நிறைவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago