எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அத்துடன், பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் முன்பு கருணாநிதி சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
மின் தூக்கி, நகரும் படிகட்டு, ஏசி அறைகள் என பல்வேறு வசதிகளுடன் பஞ்சப்பூர் பேருந்து முனையம் ரூ.408.36 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பேருந்து முனையத்தை திறந்துவைத்த முதல்வர், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் அது பற்றியும் கேட்டறிந்தார். இந்த பேருந்து நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 3,200 பேருந்துகளை கையாளும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தும்,ரூ.408.36 கோடி மதிப்பிலான கலைஞர் மு. கருணாநிதி பேருந்து முனையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பிறகு முனையத்தின் முதல் தளத்தில் நகரப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


