எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாகிஸ்தான் : உலக வங்கயிடம் இருந்து பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை ரஷிய தயாரிப்பான ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு சர்வ சாதாரணமாக இந்தியா முறியடித்தது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிலையில், உலக வங்கியிடம் கூடுதல் கடன் விடுக்கக் கோரி பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தானின் பொருளாதார விவகாரப் பிரிவு உலக வங்கியை டேக் செய்து வெளியிட்ட பதிவில், எதிரிகளால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதால், சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடனை பாகிஸ்தான் கோருகிறது. அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், சர்வதேச கூட்டாளிகள் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாகிஸ்தானின் பொருளாதார விவகாரப் பிரிவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசின் உண்மை கண்டறியும் பிரிவு தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


