முத்தியால்பேட்டையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      காஞ்சிபுரம்
Kanchipuram 2017 05 07

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை மெயின் ரோட்டில் புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் குளிர் நீர் மற்றும் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது.

 மோர் பந்தல்

நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் வா.மைத்ரேயன் கலந்து கொண்டு குளிர் நீர் மற்றும் மோர் பந்தல் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: