முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் ரஷ்ய அதிகாரியின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் அராஜகம்

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்  - சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துவரும் ரஷ்யாவை சேர்ந்த அதிகாரியின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்ற வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வான்வழி தாக்குதல்
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் புரட்சிப் படையினர் மற்றும் அங்கு அதிரடி தாக்குதல்களின் மூலம் பலரை கொன்று குவித்து, அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆகியோருக்கு எதிரான வான்வழி தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது.

30 பேர் பலி
இதனால், ரஷ்யாவை முக்கிய எதிரியாக கருதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ரஷ்யாவை சேர்ந்த விமானப்படை வீரர்களையும், உயரதிகாரிகளையும் பிணையக்கைதியாக சிறைபிடித்து வைத்துள்ளனர். கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் பிணைகைதிகளில் 30 பேரை அவர்கள் கொன்று குவித்துள்ளனர்.

தலை துண்டித்து ...
இந்நிலையில், ரஷ்யாவை சேர்ந்த மேலும் ஒரு விமானப்படை அதிகாரியின் தலையை துண்டித்து கொன்ற வீடியோ காட்சியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். பாலை வனத்தின் நடுவில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த பிணைக்கைதி அமர்ந்திருக்கும் காட்சியும், ரஷ்யாவை சேர்ந்த மற்ற வீரர்கள் உடனடியாக சரணடைந்து விட வேண்டும் என்ற அவரது கோரிக்கையும் 12 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago