கூழமந்தல் கிராமத்தில் நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் 27 நட்சத்திரங்களின் அதிதேவதைகளின் நூதன ஆலய மகா கும்பாபிஷேகம்

திங்கட்கிழமை, 15 மே 2017      காஞ்சிபுரம்
Kanchipuram  2017  05 15

காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உள்ள கூழமந்தல் கிராமத்தில் ஸ்ரீ.நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் 27 நட்சத்திரங்களின் அதிதேவதைகள் ஆலயம் உள்ளது.
 பூஜைகள்
இக்கோவிலில் நட்சத்திர பரிகாரமும், விருட்ச பூஜைகளும் நடத்தப்படுவது வழக்கம், மேலும் தமிழகத்தில் எங்கும் இல்லாத 27 நட்சத்திரங்களின் அதிதேவதைகளும் இந்த ஆலயத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆலயத்தின் புணரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்தது வந்தது. பணி முடிவடைந்ததை தொடர்ந்து அன்மையில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை யொட்டி கணபதிபூஜை, வாஸ்துசாந்தி, அஷ்டதிக்குபூஜை, முதல்காலபூஜை, கலசபூஜை, ஹோமம், நவக்கிரஹபூஜை, துர்கைபூஜை, துவாரபூஜைகள் போன்ற பல்வேறு பூஜைகள் நடந்தது. அதன் பின் இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்த பின் புனிதநீர் கொண்டு வரப்பட்டு கலசத்தின் மீது ஊற்றி பக்தர்களுக்கு தெளிக்க கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.
 கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் பொது மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இரவு அலங்கரிக்கப்பட்ட விருட்ச விநாயகர் அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: