தேசிய டெங்கு தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் மலர்விழி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

sivagani

 சிவகங்கை -சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற தேசிய டெங்கு தின விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சித் தலைவர்  சு.மலர்விழி, கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

            இப்பேரணியில், அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஸ்ரீநிதி கல்லூரி மாணவ, மாணவியர்கள், ராஸ் அகாடமி, நகராட்சிப் பணியாளர்கள், பூவந்தி கிராம சுகாதார செவிலியர் பயிற்சிக் கல்வி மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு “தடுப்போம் தடுப்போம் டெங்கு காய்ச்சலைத் தடுப்போம்,” “ஒழிப்போம் ஒழிப்போம் டெங்குக் கொசுக்களை ஒழிப்போம்,” “காய்ச்சல் தீர நிலவேம்பு குடிநீர் பருகுவீர்” என்ற வார்த்தைகள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் பேரணியானது காந்தி வீதி வழியாக சென்றது.

            இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர்  து.இளங்கோ, இணை இயக்குநர் (நலப்பணிகள்) விஜயன் மதமடக்கி, துணை இயக்குநர்  யசோதாமணி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ