கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      இந்தியா
karthi chidambaram(N)

புதுடெல்லி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இருதினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற மத்திய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியமான எப்.ஐ.பி.பி அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும். வெளிநாட்டு முதலீடுகளைப் பெற சட்டவிரோதமாக அனுமதி அளிக்க ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோரிடம் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் மீது எஃப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கையும்) பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் கார்த்தி சிதம்பரம் லண்டன் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், சிபிஐ பதிவு செய்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.


இதை ஷேர் செய்திடுங்கள்: