முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் காந்த்லா துறைமுகத்தில் ரூ.993 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

திங்கட்கிழமை, 22 மே 2017      இந்தியா
Image Unavailable

காந்த்லா, குஜராத் மாநிலத்தில் ரூ.993 கோடியில் காந்த்லா துறைமுக வளர்ச்சி திட்டங்களுக்கு  பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டிவைத்து பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் 2 நாள் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது காந்த்லா துறைமுக வளர்ச்சிக்கான  6 திட்டங்களை ரூ.993 கோடியில் அடிக்கல் நாட்டிவைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் திறமையாக பொருட்களை அதிக அளவில் கையாளும் நல்ல  துறைமுகங்கள்  நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவைகளாகும் என்றார். திடம் மற்றும் திறமையான உள்கட்டமைவசதிகள் நாட்டின் பொருளாதார முன்னேற்ற தூண்களாகும். நாடு முன்னேற வேண்டுமென்றால் நல்ல, பெரிய துறைமுகங்கள் அவசியம்  என்றும் மோடி கூறினார். துறைமுக வளர்ச்சிக்கான இந்த 6 திட்டங்களில் டாக்டர் அம்பேத்கர் பெயரில் அமைக்கப்படும் அரங்கமும் அடங்கும். 
காந்தலா துறைமுகத்திற்கு பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளரான பண்டிட் தீனதயாள் உபாத்யா பெயர் வைக்கப்படும். அனைத்து தரப்பினர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டவர் தீனதயாள் என்றும் மோடி கூறினார். துறைமுகத்தில் இரண்டு சரக்கு பெட்டகங்கள், மேம்பாலம் கட்டும் பணி, உள்பட 6 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்