முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஹாலெப்பை வீழ்த்தி ஸ்விடோலினா சாம்பியன்

திங்கட்கிழமை, 22 மே 2017      விளையாட்டு
Image Unavailable

ரோம் : இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா, ருமேனியாவின் ஹாலெப்பை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் எலினா ஸ்விடோலினாவும் (உக்ரைன்) மோதினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை பறிகொடுத்த ஸ்விடோலினா, அடுத்த இரு செட்டுகளில் எழுச்சி பெற்று ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்தார்.

4-வது பட்டம்

முடிவில் ஸ்விடோலினா 4–6, 7–5, 6–1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கினார். இந்த ஆண்டில் அவர் வென்ற 4-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் இன்று வெளியாகும் புதிய தரவரிசையில் அவர் டாப்–10 இடத்திற்குள் நுழைகிறார். வலது கணுக்காலில் காயத்தால் அவதிப்பட்ட ஹாலெப் 2–வது செட்டின் போது சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆடியது குறிப்பிடத்தக்கது.

ஹிங்கிஸ் சாம்பியன்

இதன் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)– யங் ஜான் சான் (சீனத்தைபே) ஜோடி 7–5, 7–6(4) என்ற நேர் செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் ரஷியாவின் மகரோவா– எலினா வெஸ்னினா இணையை தோற்கடித்து பட்டத்தை தட்டிச்சென்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதியில் 4 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6–1, 6–0 என்ற நேர் செட்டில் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) பந்தாடினார். ஜோகோவிச் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் இளம் புயல் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்