முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிகா வைரஸ் கிருமியால் இந்தியாவில் 3 பேர் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      இந்தியா
Image Unavailable

ஜெனிவா : ஜிகா வைரஸ் கிருமி இந்தியாவுக்கு பரவி உள்ளதை ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உறுதிபடுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஜிகா வைரஸ் தாக்கி 3 பேர் பாதிக்கட்டதை இந்திய அரசும் உறுதி செய்துள்ளது. எனினும் ஜிகா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேவையான முனெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  ஏடீஸ் என்ற வகை கொசு கடிப்பதால் 'ஜிகா' வைரஸ் என்ற கிருமி தாக்கி நோய் தொற்று ஏற்பட்டதை ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உறுதிபடுத்தியுள்ளது. பிரேசில், கொலம்பியா, உள்ளிட்ட தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஜிகா வைரஸ் தாக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் அகமதாபாத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது என உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் ஜிகாவைரஸ் பரவுவதை கட்டுப்படுத்திவிட்டதாக குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் சங்கர் சவுத்ரி தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய அரசின் அறிவுறுத்தல்கள்படி தீவிர நடவடிக்கை எடுத்து ஜிகா வைரசை கட்டுப்படுத்திவிட்டதாகவும் தற்போது இந்த கிருமி தாக்குதல் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து