முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க மாணவரை கொடுமைப்படுத்தவில்லை: வடகொரியா மறுப்பு

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

சியோல், அமெரிக்க மாணவரை கொடுமைப்படுத்தவோ அல்லது தவறான முறையில் நடத்தவோ இல்லை என்று அமெரிக்காவின் குற்றச்சாட்டை வடகொரியா முதன் முதலாக அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

அமெரிக்க மாணவர் ஒட்டோ வாம்பியர் என்பவர் சுற்றுலாவாக வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் சென்றதாக கூறப்படுகிறது. அந்த மாணவரை வடகொரியா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டதால் அந்த மாணவர் கோமா நிலையை அடைந்தார். இதனையொட்டி அந்த மாணவன் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். அமெரிக்காவில் உள்ள ஒஹியா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனான். அந்த மாணவர் மரணத்திற்கு வடகொரியாதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு சுமத்தினார். இதை வடகொரியா மறுத்து உள்ளது. சர்வதேச விதிமுறைகள்படிதான் வெளிநாட்டு கைதிகள் நடத்தப்பட்டு வருகிறார்கள். அதே விதிமுறைதான் அமெரிக்க மாணவர் விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது என்றும் வடகொரியா கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து