முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை7ல் ஸ்பைடர்மேன் ஹோம் கமிங் (ஆங்கிலம் மற்றும் தமிழிலும்)

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

வயது வித்தியாசமின்றி, சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைவரும் ஒருங்கே திரையில் பார்த்துப் பரவசமாகி ரசிக்கும் ஒரு கதாபாத்திரம், ஸ்பைடர்மேன்!

குடும்பம், படிப்பு, காதலி என ஒரு வட்டத்திற்குள் வாழ்க்கை நடத்தி வரும் அவ்விளைஞன், பொதுமக்களது பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்க விழையும் அதீத சக்தி பெற்ற வில்லன், தலைதூக்க முற்படும் தருணங்களிலெல்லாம் உருமாறி, செவ்வண்ணத்தில் கட்டம் போடப்பட்ட உடையணிந்து, பொது மக்களின் பாதுகாவலனாகச் செயல்படத் தயாராகிவிடுவான்!‘ஸ்பைடர்மேன்’ படத்தொடர் வரிசையில் உருவாக்கப்பட்டுள்ள புத்தம் புதிய படைப்புதான், ஸ்பைடர்மேன்:

ஹோம்கமிங்’!ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய கற்பனையும் கலைநயமும் ஒருங்கிணைந்தகதாபாத்திரம், இப்படத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிப் பரிமாணத்தின் மேதாவிலாசத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில், புதிய மெருகுடன் உலா வருகிறது!விஞ்ஞான ரீதியாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிலந்தியினால் கடிக்கப்பட்ட பிறகு, அந்த 15 வயது இளைஞன் பீட்டர் பார்க்கர் (டாம் ஹாலண்ட்) உடல் ரீதியாகப் பல மாற்றங்களை உணருகிறான்.

சிலந்தியின் சிறப்பியல்புகள் தன்னுள் ஐக்கியமாகிவிட்டதையும் அனுபவரீதியாகப் புரிந்து கொள்கிறான்!‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ நிகழ்வுகளுக்குப் பிறகு, தனது ஆசான் டோனி ஸ்டார்க்கின் (ராபர்ட் டெளனி Jr.) உறுதுனையோடு, அத்தை மே (மாரிசா டோமி) உடன் வாழ்ந்து வரும் போது, ‘வல்சர்' என வர்ணிக்கப்படும் அட்ரியன் டூம்ஸ் (மைக்கேல் கீட்டன் 1989, 1992 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த பேட்மேன் படங்களில் பேட்மேனாக நடித்தவர்!) தீமைப் பயக்கும் செயல்பாடுகளில் மும்மரமாக ஈடுபட்டு வருவது பற்றியும், இயந்திரத்தனம் வாய்ந்த சிறகுகள் தாங்கிய விசேடமான உடையை அவர் அணிந்திருப்பது பற்றியும் அறிய நேரிடுகிறது.

பீட்டர் பார்க்கர் என்கிற வடிவில் சாந்த சொரூபியான வாழ்விற்கும், ‘ஸ்பைடர்மேன்’ என்கிற மற்றொரு பரிமாணத்திற்குமிடையே தராசு போல சமமாக நின்று செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த நெருக்கடியின் மத்தியில் நிலவும் சுவையானதொரு அம்சம் அட்ரியனின் மகள் மிஷல் டூம்ஸ் (செண்டயா) பீட்டருடன் சேர்ந்து படிக்கிறாள் என்பது. டோபி மெக்குயர், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் ஆகியோர் ஏற்கெனவே ஸ்பைடர்மேன் அவதாரம் பூண்டது தெரிந்ததே!

டாம் ஹாலண்ட் தான் புதிய ஸ்பைடர்மேன். ஜார்ஜியா, நியூ யார்க், பெல்ஜியம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டது. மைக்கேல் ஜியாசினோ இசை அமைத்துள்ளார். சல்வாடோர் டோடினோ ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோன் வாட்ஸ் படத்தை இயக்கியுள்ளார். தற்போது தயாரிப்பில் இருக்கும் இதன் தொடர் படம், 2019இல் வெளியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து