முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் பெய்த கனமழை எதிரொலி: நிலச்சரிவில் 62 வீடுகள் புதைந்து 120 பேர் பலி?

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

சிச்சுவான், சீனாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி சுமார் 120-க் கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளை அகற்றி உயிருடன் இருப்பவர்களை மீட்பதற்கான பணிகள் போர்க்கால அடிப்படை யில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ளது மாவோசியான். திபெத் மற்றும் ஜியாங் தன்னாட்சி பகுதியில் உள்ள உயர்ந்த மலையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மாவோசியானில் உள்ள ஜின்மோ கிராமத்தை பாதித்தது. அதிகாலை 6 மணிக்கு நிகழ்ந்த இந்த நிலச்சரிவில் ஜின்மோவில் ஓடிய ஆற்றின் 2 கி.மீ தூர பாதையும், 1,600 மீட்டர் சாலையும் அடியோடு மண்ணில் புதைந்தன.

மீட்புப் படையினர் தேடுதல் ..

அருகில் இருந்த 62 வீடுகளும் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 120 பேர் பலியாகி இருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவு சம்பவத்தை கேள்விப்பட்டதும் விரைந்து சென்ற மீட்புப் படையினர் உயிருடன் இருப்பவர்களை தேடி வருகின்றனர்.
கணவன், மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை என இதுவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மட்டுமே இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 3 பேருக்கும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 உயிருடன் இருப்பவரை கண்டறிவதற்கான கருவிகள் 

நிலச்சரிவில் சிக்கியவர்களை உடனடியாக மீட்கும்படியும் தேவையான அனைத்து நடவடிக் கைகளையும் எடுக்கும்படியும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். மாகாண அரசும், உயர்நிலை பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு படையினரை அனுப்பி வைத்துள்ளது. 300-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மண்ணை அகழ்ந்தும், உயிரு டன் இருப்பவர்களை கண்டறிவதற்கான கருவிகளை வைத்தும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை சிச்சுவான் மாகாண அரசின் செய்தித் தொடர்பாளர் தங் லிமின் உறுதி செய்துள்ளார்.

அண்மையில் பெய்த கனமழை காரணமாகவே இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், இதனால் ஜின்மோ கிராமத்தில் ஏராளமான வேளாண் நிலங்கள் சேதமடைந்து விட்டதாகவும் உள்ளூர் போலீஸ் ஒருவர் தெரிவித்தார். மலைகளில் இருந்து ராட்சத பாறைகளும், மண்ணும் சேர்ந்து விழுந்திருப் பதால், அப்பகுதியே கடுமையாக சேதமைடைந்துள்ளது.

சாலைகள் மூடப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக மாவோசியானுக்கு வரும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட நெருக்கடியான சேவை களுக்கு மட்டுமே அந்த சாலைகள் திறக்கப்படுகின்றன. சிச்சுவான் மாகாணத்தில் கடந்த 2008-ல் நிகழ்ந்த பூகம்பத்தில் 87,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து