முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டது எவ்வாறு?

புதன்கிழமை, 12 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

விலகல் - நேர்காணல்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஓராண்டு காலம் செயல்பட்ட இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி அந்த பதவியில் இருந்து விலகினார்.  இதைத் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி, ஷேவாக் உள்பட 10 பேர் விண்ணப்பம் அளித்தனர். விண்ணப்பித்தவர்களில் 6 பேருக்கு மட்டும், சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகிய ஜாம்பவான்கள் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நேர்காணலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

சாஸ்திரி - ஜாகீர்

நேர்காணல் முடிவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக  ரவி சாஸ்திரியும் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானும் நியமிக்கப்பட்டனர். 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை ரவிசாஸ்திரி பதவி வகிப்பார். ஜாகீர்கானின் பதவி காலம் 2 ஆண்டு என்று தெரிவிக்கப்பட்டது. சில குறிப்பிட்ட வெளிநாட்டு பயணத்தின் போது பேட்டிங் ஆலோசகராக முன்னாள் கேப்டன் டிராவிட் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் போட்டி ...

இந்த நிலையில், ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டதின் பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் வாரிய வட்டார தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக் மற்றும் ரவி சாஸ்திரி இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், விராட் கோலி, ரவி சாஸ்திரிக்கு அளித்த பரிந்துரை காரணமாக அவரே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினரான கங்குலி ரவி சாஸ்திரியை நியமனம் செய்ய ஆர்வம் காட்டவில்லை.

டெண்டுல்கர் தலையீடு

எனினும், டெண்டுல்கர் கங்குலியை சரிகட்டியுள்ளார். அணியின் முடிவுக்கே மதிப்பளிக்க வேண்டும் என்று டெண்டுல்கர் கங்குலிக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இருப்பினும், பந்து வீச்சாளர் நியமனத்தை பொறுத்தவரை பாரத் அருணை நியமிக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், ஜாகீர் கானை கங்குலி நியமிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து