முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவையில் பேச அனுமதி மறுப்பு: மாயாவதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மாநிலங்களவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து எம்.பி. பதவியை பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ராஜினாமா செய்துள்ளார்.

அமளி ...

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் 2-வது நாளான நேற்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை 12 மணிவரையில் ஒத்திவைக்க நேரிட்டது.

அனுமதி இல்லை ...

மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பேசுகையில், என்னை பேச அனுமதிக்க வில்லை என்றால் என்னுடைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார். நான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை இப்போதே கொடுத்துவிடுவேன், என்றார் மாயாவதி. உடனடியாக அவையில் இருந்து வெளியேறிவிட்டார். பின்னர் மாயாவதி பேசுகையில், நான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய போகிறேன். அவையில் நான் பேச அனுமதிக்கப்படவில்லை.

அனுமதி மறுப்பு ...

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் தலித் பிரிவினர்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடக்கிறது. ஆனால் மாநிலத்தில் ஆளும் பாரதீய ஜனதா துணை நிற்கிறது. நாங்கள் அங்கு செல்ல அனுமதி கோரினோம். அனுமதி மறுக்கப்பட்டு விட்டது, முயன்ற போது ஹெலிபேட் பிரச்சனையை குறிப்பிட்டு அனுமதி மறுக்கப்பட்டது. சாலை வழியாக அங்கு செல்ல அனுமதி கோரி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினோம். ஆனால் மாவட்ட நிர்வாகம் நாங்கள் அங்கு செல்வதற்கு அனுமதிக்கவில்லை. எங்களுடைய கட்சியினரை சஹான்பூருக்கு அனுமதிக்கவில்லை.

அனுமதிப்பது கிடையாது

உத்தரபிரதேசத்தில் இப்போது மகா குண்டா ஆட்சி நடைபெறுகிறது. அங்கு யாருக்கும் பாதுகாப்பு கிடையாது. மாநிலங்களவையில் எனக்கு பேச வெறும் 3 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இது பூஜ்ஜிய நேரம் கிடையாது என நான் கூறினேன். என்னால் மூன்று நிமிடங்களுக்கு மேல் பேச முடியும் என்றேன். பாராளுமன்றம் மக்களின் நலனுக்கானது. ஆனால் சபாநாயகர் எங்களை பேச அனுமதிப்பது கிடையாது. மூன்று நிமிடங்களுக்கு மேல் பேச முடியாது. அவையில் பேசமுடியாமல் என்னுடைய பயன் என்ன, தலித் பிரிவினர் வாக்குகளை பெற தலித் வேட்பாளார்கள் குறித்து பாரதீய ஜனதா யோசிக்கிறது. ஆனால் அவர்களால் ஒரு வாக்கைகூட பெற முடியாது என்றார்.

ராஜினாமா அறிவிப்பு

தலித் பிரிவினர் மீதான அட்டூழியங்களை அவையில் பேச எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றால் நான் எம்.பி.யாக இருந்து என்ன நடக்கப்போகிறது, என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன். என்று மாயாவதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து