முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ள ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவாக வாக்களித்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் நன்றியையும் மோடி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் (71) அமோக வெற்றிபெற்றுள்ளார். இவர் நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். 

தோல்வி அடைந்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமாருக்கும் வாழ்த்துக்களை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் ஜனநாயக முறையில் கொள்கை மற்றும் கோட்பாடு அடிப்படையில் நடந்தது பெருமைக்குரிய விஷயம் என்றும் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வெற்றிபெற்றுள்ள ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீங்கள், இந்த பதவியை பயனுள்ளதாகவும் ஒரு உதாரணமாக இருக்கும்படி பணியாற்ற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டவுடன்  தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற ஆதரவு அளித்த அனைத்து கட்சி எம்.பி.. எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டுகளை மற்றொரு டுவிட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.
மொத்த ஓட்டில் 65 சதவீதத்தை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து