முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசு பாதுகாப்பு என்ற போர்வையில் மனிதர்கள் மீதான தாக்‍குதல் - கொலை சம்பவங்களை அனுமதிக்‍க முடியாது: சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்‍கல்

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பசு பாதுகாப்பு என்ற பெயரில், மனிதர்கள் மீதான தாக்‍குதல் மற்றும் கொலைச் சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்‍க முடியாது என சுப்ரீம்கோர்ட்டில், மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்‍கல் செய்துள்ளது.

பிரதமர் கண்டிப்பு

மாடுகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டதிலிருந்தே பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் பல மாநிலங்களில் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிகரித்து இந்த சம்பவங்கள் ஆளும் பா.ஜ.க அரசுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பசு பாதுகாப்புக்கு அரசியல் அடையாளம் ஏற்படுத்துவதோ, மதச் சாயம் பூசுவதோ ஏற்புடையது அல்ல. இதனால், தேசத்துக்கு எந்த ஆதாயமும் இல்லை. பசுவை அன்னைக்கு நிகராக மதிக்கும் நம்பிக்கை நம் தேசத்தில் பரவிக்கிடக்கிறது. ஆனால், அதற்காக சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி கவலை

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டில் படுகொலைகள் நடப்பது கவலை அளிக்கிறது. கும்பல் மனப்பான்மையை கட்டுப்படுத்த முடியாததாகிவிடும் போது சமுதாயத்தின் அடிப்படையைக் காக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் யாரும், தங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. ஜனநாயக மாண்புகளைப் பாதுகாக்க ஊடகங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.

பொதுநல வழக்‍கு

அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், மாட்டிறைச்சி மற்றும் மாடுகளை விற்பனைக்‍காக கொண்டு செல்வோர் மீது அவ்வப்போது தாக்‍குதல் நடத்தப்படுகிறது. பசுக்‍காவலர்கள் என்ற பெயரில் சில அமைப்பினர் நடத்திய இதுபோன்ற தாக்‍குதல்களில், சிலர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனர். எனவே, இதற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில், பொதுநல வழக்‍கு தொடுக்‍கப்பட்டது.

ஒருபோதும் அனுமதிக்‍காது

இந்த வழக்‍கு நேற்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்‍கல் செய்யப்பட்டது. பசு பாதுகாப்பு என்ற பெயரில், மனிதர்கள் மீது தாக்‍குதல் நடத்துவதையும், கொலை செய்வதையும் மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்‍காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 வாரத்திற்குள் பதிலளிக்க ...

மேலும், இது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை என்பதால், அதில் மத்திய அரசால் தலையிட முடியாது என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்த வழக்‍கை விசாரித்த நீதிபதிகள், பசுக்‍காவலர்களால் தாக்‍குதல் சம்பவம் நடைபெறும் மாநிலங்களான அரியானா, உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடக அரசுகள், 4 வார காலத்திற்குள் இதற்கு பதிலளிக்‍க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் மாநில அரசுகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு  உத்தரவிட்டுள்ளது. மேலும் இத்தகைய வன்முறை கும்பல்களை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கக் கூடாது என்றும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து