எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக விளங்கியவர் முனாப் படேல். காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள அவருக்கு செக் பவுன்ஸ் வழக்கில் டெல்லி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அகர்வால் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த சம்மன் அனுப்பட்டுள்ளது.
நிவாஸ் புரமோட்டார்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் இருந்து ரூ. 25 லட்ச ரூபாய்க்கு செக் வாங்கியதாகவும், அதை வங்கியில் செலுத்திய போது, பணம் இல்லாமல் திரும்பியதாகவும், இதுகுறித்து முறைப்படி அனுப்பிய வக்கீல் நோட்டீஸுக்கு அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் பதிலளிக்கவில்லை என கோரி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில், அகர்வால் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் கூறிய குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதாக கூறி வரும் நவம்பர் -1 ஆம் தேதி நிறுவனத்தின் 7 பங்குதாரர்களும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களில் ஒருவராக முனாப் படேலும் உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


