ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2017      ஈரோடு
7 8 17 ph 2

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தலைமையில் நடைபெற்றது.

உதவித்தொகை

இக்குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன்,  குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து  மொத்தம் 251 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர்  பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட  உத்தரவிட்டார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இக்குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில்  முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள்,  அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள்,  மாவட்ட கலெக்டர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத் தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்  ஆய்வு மேற்கொண்டார்.

நலத்திட்ட உதவிகள்

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.20,000/- வீதம் ரூ.40,000/- மதிப்பீட்டில் தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.5,350/- வீதம் ரூ.16,050/- மதிப்பில் சக்கர நாற்காலிகளும் என மொத்தம் 5 பயனாளிகளுக்கு ரூ.56,050/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   வழங்கினார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) எம்.பாபு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் என்.ராமச்சந்திரன், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் சீ.குமார் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.ஜ

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து