எலும்புநோய் குறைபாடு நீங்கி உடல் வலிமை பெறுவது எப்படி?

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      மருத்துவ பூமி
bone-frecture

உலகில் உயிர்களின் படைப்பில் இறைவன் புல்லாய், பூண்டாய், புழுவாய் ஊர்வன, பறப்பன, நடப்பன, குரங்காய், மனிதனாய் உருப்பெற்று பல்லாயிரங்கோடி ஆண்டுகளாய் வாழ்ந்து வரும் இந்த பிரபஞ்சத்தில் எல்லா உயிர்களும் உருவத் தால் தன் குழந்தைகள் அனைத்தும் மிக அழகாய் பார்ப்பதற்கு பருவ வனப்பாய் பலருடைய கண்களை கவரும்படி பூரிப்பாய் காணும்.

இந்த உருவங்களில் உயிர்கள் 3 வகைகளாக்கி வகுத்து அதில் எலும்புகள் இல்லாத உருவங்கள், முதுகெழும்புகள் மட்டும் உள்ள பிறவிகள் மற்றும் கை, கால், வால் உள்ள மற்றும் வால் இல்லாத உருவங்கள் இந்த உருவங்களில் வெறும் எலும்புகளால் அழகாய் காண முடியாது. ஆனால் அதில் தசைகள் நரம்பு களால் இழுத்து கட்டி அதற்கு மேல் அழகான தோல் போர்த்தி விட்டால் மனதுக் கும் கண்களுக்கும் பூரிப்பான தோற்றம் காணக்கிடைக்கிறது.
இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். ஆனால் இதில் மாமிச பட்சண உயிர்கள் சைவ உணவு உயிர்கள் உள்ளன. இந்த உயிர்கள் தத்தம் இடங்களில் தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்றாற் போல் மாறி வளரும் மாற்றங்கள் கால நிலைக்கு ஏற்றாற்போல் உருவ அமைப்பு கள் பெருகுகின்றன.

இந்த அமைப்பில் மனிதன் உடல் அமைப்பு 286 எலும்பு தொகுதிகளில் தலை, இடுப்பு, கை, கால் மூட்டுக்கள் பெரியவைகளாகவும் மற்ற முதுகு, கைவிரல், கால் விரல்களில் எலும்புகள் இணைப்பு எலும்புகளாக தசை நார்களால் நரம்புகளின் கற்றைகளால் கட்டி உருவ அமைப்புகளால் அழகாய் வடிவமைக்கப் பட்ட உடல் தோலால் போர்த்தி உள்ளது.


தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் தன்  வளர்ச்சியில் மிக வேகமான உயரம் பெறுகிறார்கள். ஆனால் அந்தத் தாய் பால் கொடுக்கும் போது பயம், கோபம், மனஇறுக்கம் இவைகள் இல்லாத மிக அமைதியான பண்பு, பாசம், அரவணைப் போடு வீரத்தையும், தைரியத்தையும் ஊட்டி வளர்த்தால் அந்த குழந்தைகள் மட்டும் தன் வாழ்நாளில் மிகவும் புத்திசாலிகளாகவும் வலிமை உடையவர்களாகவும் உற்சாகமாகவும் எந்த செயலிலும் ஒரு உத்வேகத்தையும் உடனடி முடிவு நல்ல முடிவாக எடுத்து மற்றவர்களை திணறடிக்க செய்வார்கள். இவற்றிற்கு காரணம் அவர்கள் மன ஆற்றல் வளர்ச்சியே அவர்களின் முழு உடல் வளர்ச்சியாகும். இதிலே முழுமையான வளர்ச்சி எலும்புகளே முதன்மையானதாகும். ஏனென்றால் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் எலும்பு மூட்டுகளில் குறுத்து எலும்புகளுக்கும் எலும்புகளில் உள்ளே உள்ள மஞ்சைகளிலும் உற்பத்தியாகிறது.
மேலும் சித்த வைத்தியத்தில் எலும்புகளுக்கு உறுதி உண்டாக்க சிப்பி பஷ் பம், முத்துசிப்பிபஷ்பம், முத்துபஷ்பம், பல்கரைபஷ்பம், அண்டபஷ்பம், பேரண்ட பஷ்பம், பவளபஷ்பம், சிருங்கிபஷ்பம், இவைகளை அறுபானங்களில் உண்ண எலும்பு பற்றிய நோய் குறைபாடு நீக்கி உடல் வனப்போடு வலிமை பெற்று மனதில் பசுமையான ஆன்ம பேராற்றல் உண்டாகிறது.

மேலும் பாசான வகை மருந்துகள் மிக மிக அவசியமான ஒன்று. குறிப்பாக எலும்புகள் குறைதல், தேய்தல், வளைதல், ஒடிதல் (அழுகி விடுதல்), முழி விழுந்து நச்சு நீர் வடிதல் இவைகளுக்கு பாசான ரகம் கலந்த கந்தகம் சுத்தி செய்த மருந்து கலவைகளோடு கொடுக்க வேண்டும். இவைகள் தானாக செந்தூரம் சிலினார் அமிர்தம் கூடிய குலாந்தரன் மாத்திரை, அகத்தியர் ரசாயனம், பிருங்க ராஜகற்பம், பஞ்சதிகித்தாகுக்குலு மகத்துவராஜசிந்தூரம், சிருங்காப்ரரசம், வாதக் குமாரரசம், காலகூடரசம், நவக்கிரஹ சித்தூரம், நாராயண ரங்குசரசம், பிரபாலங் கேஸ்வரரசம், திரிபுவனகீர்த்திரசம் மற்றும் வாத சம்மந்தமான நோய்களுக்கு லோகாசோவிரா, பஞ்சதிக்தாகுக்குலு, வாதராஷசஸ் மாத்திரை, வாதாங்குசம், ஆறுமுக செந்தூரம், அய்காந்த செந்தூரம், அயவீர செந்தூரம், அவபிருங்கராஜ கற்பம், சண்டமாருதம், கவுரி சிந்தாமணி ரசகெந்தி, மெழுகு, நத்தி மெழுகு போன்ற மருந்துகளால் குணப்படுத்தலாம்.

மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் தைலங்கள் தேய்த்தும் ஒற்றடம் கொடுக்கலாம்.
குறிப்பிட்ட தைலங்கள் நீங்களே தடவிக் கொள்ளலாம். மற்றும் வர்ம மருத்து வம் தெரிந்தவர்களிடம் தாங்கள் சென்று அந்த முறைப்படியான மருத்துவம் செய்து கொள்வதால் உங்களுக்கு நிரந்தரமான நோய்களுக்கு தீர்வு காணமுடியும். இந்த வர்ம மருத்துவத்தில் எலும்பு மட்டுமல்ல. நரம்பு தசை பிரளுதல் இன்னும் தோலில் உண்டாகும் தடித்த மதமதப்பான உணர்வுகள் குறைந்து நல்ல செழிப்பான உடல் மற்றும் தோல் வனப்பு பெறுகிறது. அது மட்டுமல்ல. அறிவாற்றல் பல மடங்கு உயர்ந்து பல காலம் மறந்திருந்த செய்திகளும் நம் மூளையில் புத்துணர்வோடு பலமளிக்கிறது. இந்த வர்ம தடவுதலால் நாளமில்லா சுரப்புகள் உந்தப்பட்டு அதில் சுரக்கும் ஆர்மோகன்கள் எலும்புகளின் உறுதிக்கு பயன்படுகிறது.

இதையே சோதிட சக்கரத்தில் உடல் சக்கரமாக 6 ஆதாரங்கள் 12 ஆக ஆண், பெண் என்று 12 கட்டங்கள் இந்த 12 கட்டங்களில் 3-வது வாரங்கள் என நம் உடலில் 9 வாயல்கள் இந்த 9 வாயல்களுக்கு 3 நட்சத்திரங்கள் வீதம் 3-க்கு 9-27 நட்சத்திரங்கள் இந்த 27 நட்சத்திரங்கள் 30 நாட்களில் திதிகள் 14 வளர் பிறை 14 தேய்பிறை மற்றும் 1 நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள் வீதம் 27 நட்சத்திரத் திற்கு 27-க்கு 4-108 வர்மபுள்ளிகள் இவை நான மண்டலத்திற்கும் சோதிட கட்டங் களுக்குட்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

மேலும் ஒருவன் பிறப்பு நட்சத்திரத்தில் அவள் பிறந்த நேரத்தில் 12 ராசி கட்டங்களில் 1, சூரியன் - தந்தை ஸ்தானம், உயிர் ஸ்தானம், இதயத்தின் பிரதானமாகும். வலிப்பு தோல் சம்மந்தமானது. 2) சந்திரன் - தாய் ஸ்தானம் மனம் ஸ்தானம் நுரையிரல் பிரதானமாகும். சலி சம்மந்தமானது 3) செவ்வாய் - சகோதர ஸ்தானம் ரத்தம் எலும்பு உடல் உஷ்ணம், பிரதானம் கருப்பை சம்மந்தமானது.

4) புதன் - கழுத்து தாய்மாமன் ஸ்தானம் மூளை நரம்புகள் சுரப்பிகள் சம்மந்த மானது. கல்வி, புத்தி 5) வியாழன் - புத்திஸ்தானம், குருஸ்தானம், தலை, நினைவுகள் மலமூத்திர சம்மந்தமானது. அடிவயிறு பாகம் 6) வெள்ளி- களஸ்திர ஸ்தானம், உறுப்புகள் சம்மந்தமானது. பால்வினை நோய் நீரிழிவு நோய்கள் முகம் 7) சனி- ஆயுள் ஸ்தானம் காது, மூக்கு, தொண்டை, வாயு கோளாறுகள் சம்மந்த மானது. தொடை பகுதி 8) ராகு – மாதா பிதா ஸ்தானம், தொற்று நோய்கள் விஷ கடிகள் குடல் சம்மந்தமானது. கால் பகுதி 9) கேது – பிதா விதர் ஸ்தானம் - பிராசு தெய்வ முறைகள் நுண்கிருமிகள் பாதிப்பு குஷ்டம் தோல் சம்மந்தமான நோய்கள் காட்டும் கால்பகுதி, 12 கட்டங்கள்.

1) லக்கணம் - தலை மூளை, உயிர் 2) முகம், காது, மூக்கு, கண், தொண்டை, 3) கழுத்து தொண்டை, கை மற்றும் வர்ம புள்ளிகள் 4) நுரையிரல், மார்பு 5) இதயம், மேல்வயிறு 6) எலும்பு, தசை நார்கள் 7) பெண் கரோணிதம், ஜனன் உறுப்புகள் மூச்சு 8) ஆண் பெண் ஜனை உறுப்புகள், மூத்திரம் இருப்பு,
9) தொடை பகுதி 10) முழங்கால்கள் மூட்டுகள் எலும்பு தசை நார்கள், 11) கணுக் கால் பகுதி குருத்து எலும்புகள் 12) பாதம், அடிபாகத்தில் உயிர் ஆற்றல் வர்ம புள்ளிகள் இதிலே 1 பிறந்த சாதக பலன்கள் நிசா, புத்தி, சுந்தரம் ஆகும்.

2) கோசார சாதக பலன்கள் என்பது தற்கால பலன்கள் ஆகும். ஆனால் பிறந்த சாதக பலன்கள் தான் நிரந்தரமானதாக கருதப்படுகிறது. இந்த பலன்களை தழுவி தான் மருத்துவம் பலன்கள் தருகின்றன.

இன்றைய வேகமாக அவசரமான காலத்தில் எந்த நோய்கள் ஆனாலும் எலும்பு முறிவுகள், வலிகள், வீக்கங்கள் உடனே குணம் பெறதான் அனைவரும் விரும்புகிறோம். இதற்காக ஆகும் செலவுகளை பற்றி யாரும் கவலை கொள்வ தில்லை. ஏனென்றால் பணத்தை சம்பாதிக்கலாம். உடல் அழிந்தால் உயிர் பிரிந்து விடும். பிறகு அவர்களை நாம் மறுபடியும் பார்க்கவோ பேசவோ முடியாது என்பதை கருத்தில் கொண்டு செயல்படுகிறார்.  எலும்பு என்பது தாயின் தீர்ப்பத்தில் தந்தையின் சுக்கிலத்தால் பெறப்படும் உருவம். இந்த எலும்பு இந்த அமைப்பின் மாற்றங்களால் வாத பித்த கபம் என் னும் நோய்களுக்கு ஆட்பட்டு நோய்கள் உண்டாகிறது. இதை மருந்துகள் தீர்க்க முடியும். ஆனால் எலும்புகளின் முறிவுகள் அதை பக்குவமாக அந்த அந்த இடத் தில் பொருத்தி மூலிகை பச்சியிலைகள் கொண்டு கட்டி மறுபடியும் நகராமல் இருக்க மூங்கில் தப்பைகள் வைத்து கட்டி அந்த எலும்புகள் கூடி இணைந்து மறு படியும் பழையபடி அசைத்தும் நம் வீட்டு வேலைகள், செய்ய பயன்படுத்தும் வித மாக பராமரிக்க பழக வேண்டும். நாம் விபத்தினால் உண்டான பாதிப்பை சரி செய்து நம் தேவைகளை வேலைகளை நாமே செய்து கொள்ள தேவையான பயிற்சி பெற உதவுவது எலும்பு மூட்டு மருத்துவர்கள். ஆகவே எலும்புகளை முறைப்படி சரியாக இணைத்து சேர்த்து மறுபடி எந்த சோர்வும் உண்டாகாதபடி சரிசெய்து கட்டுகட்டி குணப்படுத்த இயல்பாக பயிற்சி பெற்று ஆர்வமோடு கடவுளின் கிருபை பெற்றவர்களிடம் சென்று குணம்பெற தங்களுக்கு ஒரு புதிய செய்தியாக அளிக்கிறோம்.

18 சித்தர்களும் திருமூலரும் பல ஆயிரக்கணக்கான மூலிகையை அரிய வைத்திருக்கிறார்கள். இதையே நம் கண் முன் தோன்றிய அருட்பெரும் ஜோதி தனிப் பெருங்கருணை ராமலிங்க வள்ளலார் உணவே மருந்து, மருந்தே உணவு என்று நமக்கு மிக எளிமையாக எண்ணற்ற வகையில் உடலுக்கும், மனதிற்கும், அறிவிற்கும், ஒழுக்கத்திற்கும், ஞானத்திற்கும், வாழ்க்கைக்கும் மிக எளிமையான முறையில் நமக்கு அருளியுள்ளார்.
குணசேகரன், எலும்பு வைத்தியர், சேலம்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

ரம்ஜான் பிரியாணி | Ramzan Special Chicken Biryani in Tamil | Iftaar Special Biryani Recipe

இந்த வார ராசிபலன் - 10.06.2018 முதல் 16.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 10.06.2018 to 16.06.2018

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து