முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் 71-வது சுதந்திர தினம்: வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாட்டின் 71-வது சுதந்திர தினத்தையொட்டி வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் ஹானி, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே நட்பும் உறவும் எப்போதும் நிலைத்து நிற்கும் என்றும் ஹானி அந்த வாழ்த்து செய்தியில் மேலும் கூறியுள்ளார். இதற்கு அதிபர் ஹானிக்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிரிசேனா, பூட்டான் பிரதமர் தஷெரிங் டாப்காய் ஆகியோரும் பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இந்தியாவுடனான உறவு மேலும் மேலும் வலுவடையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து