முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: 2 வருடத்திற்கு பிறகு மே.இ.தீவுகள் அணியில் இடம் பிடித்தார் கெய்ல்

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

கரீபியன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்டு கிரிக்கெட் தொடர் போட்டியில், 2 வருடத்திற்கு பிறகு மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார்.

5 ஒருநாள் போட்டிகள்

மே.இ.தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். 37 வயதாகும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மே.இ.தீவுகள் ஒருநாள் அணியில் இடம்பிடித்ததில்லை. கடைசியாக ஆஸ்திரேலியாவில் 2015-ல் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்திருந்தார். அதன்பின் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக மே.இ.தீவுகள் அணி செப்டம்பர் 19-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

மே.இ.தீவுகள் வீரர்கள்:

1. சுனில் அம்ப்ரிஸ், 2. தேவேந்திர பிஷூ, 3. மிகுயெல் கம்மின்ஸ், 4. கிறிஸ் கெய்ல், 5. ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), 6. கைல் ஹோப், 7. ஷாய் ஹோப், 8. அல்சாரி ஜோசப், 9. எவின் லெவிஸ், 10. ஜேசன் மொகமது, 11. அஷ்லே நர்ஸ், 12. ரோவ்மன் பொவேல், 13. மார்லன் சாமுவேல்ஸ், 14. ஜெரோம் டெய்லர், 15. கெஸ்ரிக் வில்லியம்ஸ். வெயின் பிராவோ 100 சதவீதம் உடற்தகுதி பெறாததால் சேர்க்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து