முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் லாகூர் இடைத்தேர்தல்: நவாஸ் மனைவி குல்ஸூம் வெற்றி

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

லாகூர் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்சின் மனைவி குல்ஸூம் லாகூர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 120-ஆம் இலக்கம் கொண்ட இத்தொகுதியில் குல்ஸூம் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் கட்சியின் வேட்பாளர் யாஸ்மின் ரஷீத்தை 13,000 வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வென்றுள்ளார். குல்ஸூமிற்கு 59,413 வாக்குகளும், ரஷீத்திற்கு 46,145 வாக்குகளும் கிடைத்தன.

தீவிரவாத அமைப்பான ஜமாத்-உத்-தாவாவின் தலைவர் ஹஃபீஸ் சயீத்தின் ஆதரவு பெற்ற மிலி முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷேக் யாகூப் வெறும் 4,000 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றார். சுமார் 3,20,000 வாக்காளர்களைக் கொண்டத் தொகுதியில் வாக்குப்பதிவு மிகவும் குறைந்தளவே பதிவாகியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் நவாஸ் இதே தொகுதியில் இப்போதும் தோல்வி கண்டுள்ள ரஷீத்தை 41,000 வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். இதன் மூலம் நவாஸின் மகள் மரியம் கடுமையாக பிரச்சாரம் செய்தும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நவாஸ் கட்சி வென்றுள்ளது தெரிய வந்துள்ளது. நவாஸ் குடும்பத்திற்கு செல்வாக்கு குறைந்துள்ளதையே இந்த குறைந்த வாக்குகள் வித்தியாச வெற்றி சுட்டிக்காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த வெற்றி அத்தேர்தலுக்கான பரீட்சையாகவே காணப்படுகிறது. இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நவாஸ் மூன்றுமுறை பிரதமராகியுள்ளார். லண்டனில் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டு உடல் நிலை தேறிவரும் குல்ஸூமிற்கு இந்த வெற்றி மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து