முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டிடம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருபுவனம் கிராமத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

கடந்த 2014-15ஆம் ஆண்டிற்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையில்  1 கோடி ரூபாய் செலவில் கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டிடம் கட்டப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
 
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருபுவனம் கிராமத்தில், 7000 சதுர அடி நிலப்பரப்பில்  தரை மற்றும் முதல் தளத்துடன் 5102 சதுர அடி கட்டிட பரப்பளவில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

இந்த கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகம், தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 17 பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களையும், 31 பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களையும் உள்ளடக்கியதாகும். மேலும், இவ்வலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் வாயிலாக 16,209 பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் சி.முனியநாதன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து