முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத்தில் என்னை கைது செய்யவில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

குவைத்: குவைத்தில் போலீஸார் என்னை கைது செய்ததாக சமூக வலை தளங்களில் வரும் செய்திகள் வெறும் புரளி என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. வும் நடிகையுமான ரோஜா விளக்கமளித்துள்ளார்.

குவைத்தில் வசிக்கும் தெலுங்கர்களுக்காக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நவரத்தின பிரச்சாரம் என்ற பெயரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஆந்திர மாநில மகளிர் அணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ரோஜாவும் கலந்து கொண்டார். இந்நிலையில், ரோஜாவை குவைத் போலீஸார் கைது செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதுகுறித்து ரோஜா, நேற்று அங்கிருந்தபடி ஒரு வீடியோ மூலம் சமூக வலைதளத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதில், “கூட்டம் நடைபெற்ற மேடையை போலீஸார் சோதனையிட்டனர். இது சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வுதான். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நான் கைது செய்யப்பட்டதாக தெலுங்கு தேசம் கட்சியினர் சமூக வலை தளங்களில் புரளியை கிளப்பி விட்டுள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு 400 பேர் வருவார்கள் என நாங்கள் எதிர்ப்பார்த்தோம். ஆனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து