முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு பிரதிநிதி தினேஷ்வர் சர்மா காஷ்மீரில் 5 நாள் சுற்றுப் பயணம்

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

காஷ்மீர்: காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ்வர் சர்மா, 5 நாட்கள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுயபோது, ''தினேஷ்வர் பள்ளத்தாக்கில் 3 நாட்களும், ஜம்முவில் 2 நாட்களும் தங்கியிருப்பார். அப்போது பல்வேறு அரசியல் கட்சிகள், கலாச்சார நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்'' என்றனர்.

பிரிவினை வாத தரப்பில் கூறியபோது, பிரிவினைவாத தலைவர் சையத் அலி கிலானியை, தினேஷ்வருடன் சந்திக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.

1979-ம் ஆண்டு ஐ.பி.எஸ் முடித்த தினேஷ்வர் வர்மா கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை உளவுத் துறை இயக்குநராக பணியாற்றினார்.

கடந்த 2002 முதல் இந்தப் பிரச்சினைக்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 4-வது சிறப்புப் பிரதிநிதி ஆவார் வர்மா. இதற்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் கே.சி.பன்ட், என்.என்.வோரா (காஷ்மீர் ஆளுநர்), 3 நபர் குழு ஆகியவை ஏற்கெனவே நியமிக்கப்பட்டன.

தற்போது 4-வது சிறப்புப் பிரதிநிதியான தினேஷ்வர் சர்மாவுக்கு, நாட்டின் உயரிய பொது ஊழியரான கேபினட் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவருக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து