சசிகலா, தினகரன் தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக நீடித்த வருமான வரி சோதனை - 40 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு

சனிக்கிழமை, 11 நவம்பர் 2017      தமிழகம்
sasikala-dinakaran 2017 11 11

சென்னை : சசிகலா குடும்பத்தினரையும் அவரது ஆதரவாளர்கள், நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி துறையினர் ஒரே நேரத்தில் 187 இடங்களில் தங்கள் சோதனையை கடந்த வியாழக்கிழமை தொடங்கினர். நேற்று 3 வது நாளாக 40 இடங்களில் சோதனை நடைபெற்றது.

187 இடங்களில் ...

சசிகலா உறவினர் வீடுகளில் வருமானவரித் துறையினர்  வியாழக்கிழமை ஆபரேஷன் கிளீன் பிளாக்மணி' என்ற பெயரில் தொடங்கினர். 1800-க்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபட்ட இந்த சோதனை, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி உள்பட தமிழகத்தில் 187 இடங்களில் சோதனை நடைபெற்றது. 215 சொத்துகள், 350 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு சோதனை நடைபெற்றதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

147 இடங்களில் ...

இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனை தொடர்ந்தது. இரண்டாவது நாளில் 40 இடங்களில் சோதனை முடிந்து, 147 இடங்களில் சோதனை தொடர்ந்தது. இதற்காக, டெல்லி, கொச்சி, ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்து கூடுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இந்த சோதனை நடைபெற்றது.

40 இடங்களில் ...

இந்நிலையில் மூன்றாவது நாளாக நேற்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்றது. ஜெயா டிவி அலுவலகம், அதன் இயக்குநர் விவேக் ஜெயராமன் வீடு, தி.நகரில் உள்ள விவேக் ஜெயராமன் சகோதரி வீடு, திருத்துறைப்பூண்டி, புதுச்சேரியில் உள்ள நகைக்கடை உள்ளிட்ட 40 இடங்களில் தொடர்ந்து சோதனை நடந்தது. மன்னார்குடியில் திவாகரனின் கல்லூரி உட்பட இடங்களில் சோதனை நடைபெற்றது. கைப்பற்றப்பட்ட நகை, பணம், சொத்து விவரங்களை அதிகாரிகள் பட்டியலிட்டு வருகிறார்கள். தமிழகத்தில் சசிகலா உறவினர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து அறிக்கையை, மத்திய அரசிடம் வருமான வரித்துறை தாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் 355 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் டெல்லி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் 3 நாள் சோதனையில் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், 150 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தொடர்ந்து வருமான வரி சோதனை நீடிப்பதால் சசிகலா உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சோதனை நீடிப்பதால் அனைவரும் 3-வது நாளாக நேற்றும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து