முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணிந்தர்ரெட்டி படகில் சென்று ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆறுகளும் ஏரிகளும் வேகமாக நிரம்பி வழிவதால் உபரி நீர் கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் இயற்கையாக ஒருமுகத்துவாரம் இயங்கிக்கொண்டிருக்கின்றது.உபரி நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கூடுதலாக மற்றோரு முகத்துவாரத்தை தூர்வாறும் பணி நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது அது இயங்க ஆரம்பித்துள்ளது.இதனால் கடலுக்குள் செல்லும் நீரின் வேகம் அதிகரித்துள்ளது.இதன் இயக்கத்தன்மை,நீரின் போக்கு குறித்து வடகிழக்கு பருவமழைக்கான திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணிந்தர்ரெட்டி 5 கி.மீ.தூரம் படகில் சென்று ஆய்வு செய்தார்.பின் அப்பகுதி மீனவ கிராம மக்களுடன் இது குறித்து கலந்தாலோசித்தார்.இந்த ஆய்வில் பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி,மீஞ்சூர் வட்டார வளர்ச்சி தனி அலுவலர் வாசுதேவன் முன்னாள் கவுன்சிலர் சுமித்ராகுமார்,கிராம நிர்வாகிகள் கோட்டைக்குப்பம் சந்திரசேகர்,தேசப்பன்,வைரவன் குப்பம் ஞானமூர்த்தி,கோபால்,ஆண்டிக்குப்பம் பிரபாகரன்,செட்டியாரம்மா மற்றும் கூனம்குப்பம்,எஸ்.பி.குப்பம்,நடுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராம நிர்வாகிகள் பலர் இதில் பங்குபெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து