முகப்பு

திருவள்ளூர்

Thiruvallur  2017 05 29

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இலவச தாய் சேய் நல ஊர்தி கலெக்டர் எ.சுந்தரவல்லி கொடியசைத்து துவக்கி வைத்தார்

29.May 2017

திருவள்ளுர் மாவட்டத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருவள்ளுர் மாவட்ட கிளை சார்பாக "இலவச தாய் சேய் ஊர்தி" துவக்க விழா மாவட்ட ...

Punneri 2017 05 29

அருள்மிகு ஸ்ரீ அசலாத்தம்மன் திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம்

29.May 2017

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டம்,பழவேற்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அசலாத்தம்மன் திருக்கோயில் ...

Thiruvallur 2017 05 29

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்; ரூ. 51 ஆயிரத்து 360-க்கான மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்

29.May 2017

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமையில் ...

Ponneri 2017 05 19

பொன்னேரி பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை

19.May 2017

தமிழகத்தில் நடைப்பெற்ற 2016-2017 கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வுகள் நடைப்பெற்றது.இதற்கான தேர்வு மதிப்பெண்பட்டியல் ...

Thiruvallur 2017 05 16

சேஸ் தொண்டு நிறுவனம் சார்பில் ஏழை,எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

16.May 2017

சேஸ் தொண்டு நிறுவனம் சார்பில் பழைய பண்ணூர்,திருமணிகுப்பம் ஆகிய கிராமப்புரங்களில் வசிக்கும் ஏழை,எளிய சிறுவர்கள் மற்றும் இருளர் ...

Image Unavailable

செங்குன்றம் அருகே தனியார் பள்ளி வாகனங்களை அமைச்சர், கலெக்டர் ஆய்வு

10.May 2017

தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக வாகனங்களில் ஏற்றி செல்லப்படுகிறார்களா மற்றும் வாகனங்களின் தன்மை குறித்து பள்ளி ...

Punneri 2017 05 07

பழவேற்காடு அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா

7.May 2017

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டம்,பழவேற்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் திருக்கோயில் ...

thiruvallur

செங்கற்சூளை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்: கலெக்டர் எ.சுந்தரவல்லி துவக்கி வைத்தார்

5.May 2017

 திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் வயலாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புலம்பெயர்ந்த ...

Punneri 2017 05 02

பொன்னேரியில் 103 பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ் : மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வழங்கினார்

2.May 2017

பொன்னேரி வட்டத்திற்க்குட்பட்ட காட்டூர் ஊராட்சியில் அடங்கிய காட்டூர் இருளர் காலனி மக்களுக்கு நீண்ட காலமாக சாதி சான்றிதழ்களும் ...

Punneri 2017 05 01

பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தல 502 வது திருவிழா திருத்தேர் பவனி

1.May 2017

 பொன்னேரி அடுத்த பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தல திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது அதன் நிகழ்வான ...

Thiruvallur 2017 05 01

கிராம சபைக் கூட்டத்தில் குடிநீர் பரிசோதனை முகாம்

1.May 2017

 கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி மணவாளநகரில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சேவ் பொதுநல அறக்கட்டளை சார்பாக இலவச ...

Image Unavailable

சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக வேரோடு அகற்றும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

26.Apr 2017

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சென்னை உயர்நீதிமன்ற, மதுரை கிளை உத்திரவின்படி சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக வேரோடு ...

Kanchipuram 2017 04 2017

அரசினர் நடுநிலை பள்ளியில் ஆசிரியர்கள் முயற்சியால் மாணவர்கள் சேர்க்கை 100 சதவீதம்

22.Apr 2017

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி 1-3 வார்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 3 வார்டுகளில் உள்ள 5 வயது ...

Image Unavailable

தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க ஆண்டு விழா, காதி விழா

17.Apr 2017

 திருவள்ளுரில் தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க ஆண்டு விழா,யுகாதி விழா மண்டல தலைவர் எம்.சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. மண்டல ...

Image Unavailable

டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியி்ல் 234 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

17.Apr 2017

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் 234 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை கடிதம் ...

Image Unavailable

பாடியநல்லூர் அங்களாஈஸ்வரி திருக்கோயில் 52ம் ஆண்டு தீமிதி திருவிழா

10.Apr 2017

திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம் செங்குன்றத்தில் உள்ள பாடியநல்லூர் பர்மாநகரில் உள்ள அருள்மிகு முனீஸ்வரர் அங்காளஈஸ்வரி ...

Thiruvallu 2017 04 07

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம்

7.Apr 2017

 திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற உள்ளாட்சி அமைப்பு...

Ponneri 1 2017 04 07

திருப்பாலைவனம் ஸ்ரீ   லோகாம்பிகை  உடனுறை திருபாலீஸ்வரர்   ஆலயத்தில் பங்குனி மாத பிரமோற்சவ தேரோட்டம்

7.Apr 2017

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலைவனம் என்று அழைக்கப்படும்திருபாலைவனம் பகுதியில் பாற்கடலில் இருந்து விழுந்த சிறுதுளி அமுதம் ...

Ponneri 2017 04 07

பொன்னேரியில் மாணாக்கர்களுக்கு வழிகாட்டும் மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த கருத்தரங்கு

7.Apr 2017

திருவள்ளூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில்,பொன்னேரி கல்வி மாவட்டத்தில் அடங்கிய அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் ...

Image Unavailable

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொன்னேரியில் விவசாயிகள் பேரணி

7.Apr 2017

பொன்னேரியில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எரியும் பனிக்கட்டி

உலகில் முதன் முறையாக மீத்தேன் ஹைட்ரேட் எனும் எரிபொருளை சீன பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வருடமே, எரியக்கூடிய பனிக்கட்டி என அழைக்கப்படும் மீத்தேன் ஹைட்ரேட் வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்திருந்தது. எனினும் தற்போது தான் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த வாயுவானது பனிக்கட்டி போன்று தோற்றத்தினை கொண்டிருப்பதனாலேயே எரியும் பனிக்கட்டி என அழைக்கப்படுகின்றது. இயற்கை எரிபொருளாகக் காணப்படும் இவ்வாயு எவ்வாறு தோற்றம் பெறுகின்றது என்பது தொடர்பான விளக்கப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாயுவைக் கண்டறிய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் தென்கொரிய நாடுகளும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்த நிலையில்,  சீனா இதில் வெற்றிபெற்றுள்ளது.

மனிதர்களை போன்றே....

சமூக ஈடுபாடு மனிதர்களில் அதிகம் காணப்படுகின்றது. இதே இயல்பு குரங்குகளிலும் காணப்படுவதாக தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குரங்கின் மூளையிலுள்ள நரப்பு வலையமைப்பினை ஸ்கேன் செய்து பார்த்த போது இந்த உண்மை வெளியாகியுள்ளது.குரங்குகளின் மூளைகளில் உள்ள நியூரான்களில் மனிதர்களை போன்று கற்பனைத்திறன் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கலாம் பெயர்

விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் புதிய உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய உயிரினம், பாக்டீரியா வடிவம் போன்றது. இந்த உயிரினம் பூமியில் காணப்படுவதில்லை. சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுபவை. இந்த உயிரினத்துக்கு மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் பெயரை நாசா விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

குடிநீருக்காக ....

அண்டார்டிகாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2019-ம் ஆண்டிற்குள் தொடங்க, அமீரக நாடுகள் திட்டமிட்டுள்ளன. குடிநீர் பிரச்சனையை தீர்க்க அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை வெட்டி எடுத்து, கடல்மார்க்கமாக 9,200 கி.மீ கொண்டு வந்து, பின்னர் அதை தண்ணீராக்கி விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு சுமார் 500 மில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.

மாற்று வழி

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக் கூடிய கார்கள், 2030-இல் பயன்பாட்டில் இல்லாத நிலை உருவாகும். 2030-இல் எரிசக்திப் பற்றாக்குறையாலும் சுற்றுச்சூழல் கருதியும், பெட்ரோல் புழக்கமே அரிதாகிவிடுமாம். 2024-ல் ஒரு பேரல் பெட்ரோல் வெறும் 25 அமெரிக்க டாலராகக் குறையும் என்றும், 2030-க்குள் உலகில் எண்ணெய் தொழில் முடங்கிப் போகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வானில் அதிசயம்

சூரிய குடும்பத்தில் உள்ள நெப்டியூன் கோளுக்கு அருகில் உள்ள குயிர்பெர் மண்டலத்தில், 1,500 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, குள்ளமான கிரகம் ஒன்று உள்ளது. இதற்கு ‘2007 OR10’ என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த குள்ள கிரகத்தில் 400 கிலோமீட்டர் பரப்பளவில் நிலா ஒன்று இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்மார்ட் வாட்ச்

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடிப்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கனவாக இருந்தது. இதற்கு வடிவம் கொடுக்கும் நவீன சென்சார்களைத்தான் ஆப்பிள் நிறுவன பயோமெடிக்கல் என்ஜினியர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.

கூகுள் லென்ஸ்

கூகுள் லென்ஸ் மூலம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை உங்கள் கைபேசியின் கேமராவில் காட்டினால் அதைப்பற்றிய முழு தகவல்களையும் உங்களுக்கு அளித்துவிடும். உதாரணமாக நீங்கள் செல்லும் வழியில் ஒரு பூவை பார்க்கிறீர்கள். அந்த பூவைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் அந்த பூவை உங்கள் கேமராவில் காட்டினால் போதும், உங்களுக்கு எல்லா தகவல்களையும் கூகுள் லென்ஸ் தெரிவித்துவிடும். கடினமான வைஃபை ரகசிய எண்ணை மிக எளிதாக கூகுல் லென்ஸ் மூலம் அறிந்து கொள்வதுடன், வைஃபை-யை இணைத்தும் கொள்ளலாம்.மேற்கொண்ட வசதிகளை கொண்ட கூகுள் அசிஸ்டண்ட்கள் அனைத்து ஆண்டராய்டு மொபைல்களிலும் உள்ளது.

மனிதர்களை மிஞ்சும் ரோபோ

ரோபோகள் மருத்துவர்களால் செய்ய முடியாத பல செயல்களை நொடிப் பொழுதில் செய்து முடித்து விடுகிறது. அமெரிக்காவில் உள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஒன்று, 2.5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய ரோபோவினை வடிவமைத்துள்ளனர். பொதுவாக மூளை அறுவை சிகிச்சை செய்ய மனிதர்களால் குறைந்தது 2 மணி நேரமாகும். ஆனால் அதே அறுவை சிகிச்சையை வெறும் 2.5 நிமிடத்தில் செய்யக்கூடிய திறன் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரோபோ. மேலும் சி.டி ஸ்கேன் தொழில்நுட்பத்தில் மூளையின் பகுதிகளை பிரித்து அறியக்கூடிய திறனையும் இந்த ரோபோ பெற்றுள்ளது. மூளை அறுவை சிகிச்சையில் மட்டுமல்ல, இடுப்பு தொடர்பான ஆபரேஷன்களிலும் இந்த சாதனம் பயன்படுத்தபடுகிறது.

மறதி நோய்

வயது மூப்பின் காரணமாகவும், மன அழுத்தம் காரணமாக அல்சைமர் எனும் மறதி நோய் ஏற்படுவதாக நம்பப்பட்டு வந்த நிலையில்,  தற்போது வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, சோயா ஒரு சில தானியங்கள், சில பால் பொருட்கள் உள்ளிட்டவற்றில் உள்ள அதிக புரதம் மறதி நோயை உண்டாக்குவதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதிய வசதி

உலகம் முழுவதும் 200 கோடி பேர் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கில் உணவுகளை ஆர்டர் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம், ‘ஃபேஸ்புக் ஆர்டரிங்க்’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், வரும் அக்டோபர் மாதம் முதல் உணவு ஆர்டர் செய்யும் புதிய வசதி நடைமுறைப்படுத்தவுள்ளது.

காற்று தூய்மை

மன அழுத்தம் மட்டுமல்ல, காற்று மாசுபாடு கூட தூக்கமில்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு. மூக்கு, தொண்டையின் பின்புறப் பகுதிகள் மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டு தூக்கமின்மைக்கு காரணமாக மாறுவதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.