மணிலா அருகே சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      உலகம்
Modi-rice-Philippines 2017 11 13 0

மணிலா, ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுவதற்காக பிலிப்பைன்ஸ் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இங்குள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டு . அங்கு பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகளை சந்தித்து  ஆலோசனை நடத்தினார் .

தென் இந்தியாவை போலவே, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசியநாடுகளிலும் அரிசி முக்கிய உணவாக உள்ளது. சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே லாஸ் பனோஸ் நகரில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான இந்திய விஞ்ஞானிகளும் பணியாற்றி வருகின்றனர்.

ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டார். அங்கு உருவாக்கப்பட்டு வரும் புதிய நெல் ரகங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு பணியாற்றி வரும் இந்திய விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார்.
சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தின் மண்டல மையம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் அமைக்கப்படுகிறது. இதுதொடர்பான விவரங்களையும் அவர் கேட்றிந்தார்.


இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் ‘‘வாரணாசியில் அமையும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தின் மண்டல அலுவலகம், இந்தியாவில் புதிய நெல் ரகங்களை உருவாக்க வழிகோலும். இந்திய விவசாயிகளின் வருவாய் பெருகவும் உதவிகரமாக விளங்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தின் மண்டல மையம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் அமைக்கப்படுகிறது. இதுதொடர்பாக   மணிலாவில்  இந்திய விஞ்ஞானிகளிடம்  விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து