முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை - சென்னை வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெகுதொலைவில் உள்ளதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.


இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி மசூலிப்பட்டினம் அருகே இருப்பதால் தமிழகத்திற்கு மழை பாதிப்பில்லை . இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் . சென்னையில் குறிப்பிடத்தகுந்த மழை இருக்காது, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து