முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அணி 286 ரன்கள்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

ஹாமில்டன் : வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் சேர்த்துள்ளது.

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வைட் பீல்டிங் தேர்வு செய்தார். ஹோல்டருக்கு ஒரு போட்டியில் தடைவிதிக்கப்பட்டதால் பிராத்வைட் வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக செயல்பட்டார்.

நியூசிலாந்து அணியின் ராவல், லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 22 ரன்கள் எடுத்த நிலையில் லாதம் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ராவல் உடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கேன்வில்லிம்சன் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய ராவல் 84 ரன்கள் சேர்த்தார்.

நியூசிலாந்து ஒரு கட்டத்தில் 153 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. கேன் வில்லியம்சன், ராவல், டெய்லர் (16), நிக்கோல்ஸ் (13), சான்ட்னெர் (24) அடுத்தடுத்து ஆட்டமிழக்க நியூசிலாந்தி திணறியது. முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த கிராண்ட்ஹோம், இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடினார். ஆனால், 63 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து முதல்நாள் ஆட்ட முடிவில் 87 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் சேர்த்துள்ளது. பிளண்டெல் 12 ரன்னுடனும், வாக்னர் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கேப்ரில் 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து