முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தொழிலதிபர்ரான டெல் கணேசன், ஹாலிவுட் படத்தை தயாரித்துள்ளார்.

இதில் தமிழ் நடிகர் நெப்போலியன் முதல் முறையாக அமெரிக்க திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.

வில்லனாக தனது திரைப்பயணத்தைத் துவங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நெப்போலியன், கதாநாயகனாக உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், தனது தளராத முயற்சியால் அரசியலிலும் களம் கண்டு, ஒரு முறை மத்திய அமைச்சாராகவும், ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

சமீபகாலமாக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நெப்போலியன் டெவில்ஸ் நைட் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் என்ற ஒரு முக்கியமான வேடமேற்றிருக்கும் நெப்போலியன், இதன் மூலம் சர்வதேச அரங்கில் ஒரு நடிகராக அறிமுகமாகிறார்.

குற்றப்பின்னணியுடன் உருவாகும் இத்திரைப்படத்தை எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் சாம் லோகன் கலேகி இயக்குகிறார். நைன் ரூஜாக தற்காப்புக் கலை வல்லுநர் ஜெஸ்ஸி டீன் நடிக்கிறார். ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த திரைப்படத்தின் அறிமுக விழாவில் தயாரிப்பாளர் டெல் கணேசன், நடிகர் நெப்போலியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்போது பேசிய நெப்போலியன், தான் இந்த இடத்துக்கு வர காரணமானவர் இயக்குனர் பாரதிராஜா என குறிப்பிட்டார். தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து