முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ்: முதல் 10 இடங்களில் 3 இடங்களை பிடித்த ரொனால்டோ போஸ்ட்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

மாட்ரிட் : இன்ஸ்டாகிராமில் விளையாட்டு வீரர்கள் போஸ்ட் செய்த படங்களில் அதிக லைக்ஸ் வாங்கிய பட்டியலில் முதல் 10 இடங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ போஸ்ட் செய்த 3 படங்கள் இடம்பிடித்துள்ளது.
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக இணையத் தளங்கள் கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ள அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் இன்ஸ்டாகிராம் போட்டோக்களை பகிர்ந்து கொள்ள அதிக அளவில் பயன்படுகிறது. விளையாட்டுத்துறையில் சாதித்து வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது போட்டோக்களை இதில் போஸ்ட் செய்வார்கள். அப்படி செய்யும் போட்டாக்களை அவர்களது ரசிகர்கள் லைக் செய்வார்கள். வீடியோவாக இருந்தால் பார்த்து ரசிப்பார்கள்.

ரசிகர்கள் லைக்

கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர், டோனி, விராட் கோலி போன்ற தலைசிறந்த வீரர்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். இவர்கள் ஒரு போட்டோவை போஸ்ட் செய்த மறுநிமிடமே லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துவிடுவார்கள்.
இப்படி 2017-ல் எந்த வீரர் போஸ்ட் செய்த போட்டோவிற்கு அதிக லைக் கிடைத்தது என்ற புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது. இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ போஸ்ட் செய்த படங்கள் முதல் 10 இடங்களில் மூன்று இடங்களை பிடித்துள்ளார்.

கோடிக்கணக்கில் ...

ரொனால்டோவிற்கு வாடகைத் தாய் மூலம் சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. இந்த குழந்தைகள் மற்றும் முதல் மகனுடன் ரொனால்டோ எடுத்துக் கொண்ட போட்டோக்களை போஸ்ட் செய்திருந்தார். இதற்கு கோடிக்கணக்கான லைக்ஸ் கிடைத்திருந்தது. அதன்பின் அவரது காதலிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தையுடன் எடுத்துக்கொண்ட போட்டோவிற்கு 11.1 மில்லியன் லைக்ஸ், 1.493 லட்சம் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ குறித்து கருத்து

நெய்மர் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறும்போது மெஸ்சி வீடியோ வெளியிட்டிருந்தார். அதை 14.9 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். 1.4 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரொனால்டா தனது மகன் விளையாடிய கால்பந்து போட்டியின் வீடியோவை பதிவு செய்திருந்தார். இதை 14.4 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்து, 2.62 லட்சம் பேர் கருத்து பதிவு செய்திருந்தனர். நெய்மர் தனது வித்தியாசமான படத்தை வெளியிட்டிருந்தார். அதற்கு 65 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது. 50 ஆயிரம் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து