முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடர்: புவனேஷ்வர் குமார் சவாலாக இருப்பார் - முன்னாள் வீரர் ஸ்ரீநாத் புகழாரம்

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கடும் சவாலாக இருப்பார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பயணம்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்குகிறது. தென் ஆப்ரிக்கா தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ஜவஹல் ஸ்ரீநாத், இந்திய அணி விராட் கோலி தலைமையில் கடந்த ஆண்டு பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளது. இந்தத் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் கடுமையான தாக்குதலை தொடுப்பார்கள் என நம்பலாம். புவனேஷ்வர் குமார் பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும் என்றார்.

ஆல்டர்னுடன்...

முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டெர்ரி ஆல்டர்னுடன் புவனேஸ்வர் குமாரை ஒப்பிட்டு பேசினார். டெர்ரி ஆல்டன் வேகமாகவும், இலக்கை நோக்கி துல்லியமாக பந்து வீசக்கூடியவர் என்றார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புவனேஷ்வர் குமாரின் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன். நான் அவரை முழுவதுமாக நம்புகிறேன். அவர் இந்தத்தொடரில் கடுமையான சவால் அளிப்பார். கடந்த சில மாதங்களில் அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அற்புதமானது.

பெரிய சொத்தாக...

அவர் பல்வேறு வேகங்களில் பந்து வீசக்கூடியவர். அதேபோல் கட்டுப்பாடுடன் பந்து வீசக்கூடியவர். தென் ஆப்ரிக்கா தொடரில் அவர் அணிக்கு பெரிய சொத்தாக இருப்பார். பொதுவாகவே அவரது பந்துகள் சீரான வேகத்தில் நன்றாக பவுன்ஸ் ஆகி செல்லும்.

தென் ஆப்ரிக்கா ஆடுகளங்கள் இந்தியாவை விட முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அங்கு பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகும் அவை வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். புவனேஷ்வர் குமார் உட்பட இந்திய வீரர்கள் அங்கு நிலவும் காலநிலைக்கு ஏற்க தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

துர்திர்ஷ்டவசமானது

அதேபோல் வெள்ளை நிற பந்துகளுக்கும், சிகப்பு பந்துக்கும் வித்தியாசம் இருக்கும். அதற்கு ஏற்றவாறு பந்துவீச வேண்டும். பந்துவீச்சாளர்கள் அதிகமாக பந்துவீச வேண்டும் அப்போது தான் தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். அதேசமயம் அதிகமாக பந்துவீசும் போது காயங்கள் ஏற்படுவது துர்திர்ஷ்டவசமானது. நமது அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களும் இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள் எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து