அரசு பணிகளில் தலையிட கவர்னருக்கு அதிகாரம் இல்லைபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      புதுச்சேரி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2017-ல் மத்தியில் மாற்று அரசு இருந்தாலும் பல சோதனைக்கிடையில் மக்களுக்கு சேவையாற்றி வந்துள்ளோம். மக்கள் நல திட்டங்களுக்கான முட்டுக் கட்டைகளை அகற்றி வந்துள்ளோம். புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வரலாறு காணாத வகையில் சுற்றுலா பணயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் இருக்க தேவையான வசதிகளை அரசு செய்திருந்தது.புதுவையில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளதால் சுற்றுலா வளர்ச்சி பெற்று வருகிறது. சுற்றுலா மூலம் வருவாயும் பெருகி உள்ளது. அரசுடன்மாற்று சிந்தனை இருந்தாலும் பாதுகாப்பு விஷயத்தில் அரசுடன் இணைந்து கவர்னர் கிரன்பெடி பணியாற்றி உள்ளார். அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். முத்தலாக் விவகாரம் தொடர்பான சட்டம் எந்தவிதமான முன்னறிவிபபும் இன்றி சம்மந்தப்பட்டவர்களின் ஆலோசனையும் பெறாமல்மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அள்ளித் தெளித்த கோலம் போல கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் காங்கிரஸ்; கட்சி எதிர்க்கும். இதை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் அதிமுகவில்நிலவும் குழப்பத்தை முன்வைத்து கட்சி தொடங்கும்அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அரசியல் கட்சியை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பொங்கலுக்கு பதுவையில் இலவச பொருட்கள் கட்டாயமாக வழங்கப்படும். இதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. எங்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படுகிறது. முதல்வரும், அதிகாரிகளும் வரையறுக்கப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டே செயல் பட்டு வருகிறோம். அரசின் பணிகளில் தலையிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை. தேவைப்பட்டால் எழுத்துபூர்வமாக கடிதம் கொடுத்துத்தான் அரசு செயலாளர்களிடம் கவர்னர் விளக்கம் கேட்க முடியும். இதுவரை கவர்னரின் அதிகாரம் குறித்து 15 கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் அவர் அரசின் ரகசியங்களை சமுக வளைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது லட்சுமிநாராயணன் எம்எல்ஏ உடனிருந்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து