சேலத்தில் ஐயப்பனுக்கு திருஆபரண பெட்டி வரவழைக்கப்பட்டு ஜோதி தரிசனம்

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      சேலம்

ஆண்டு தோறும் காத்திகை மாதத்தில் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல மற்றும் மகர பூஜை நடைபெறும். அதுசமயம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாமுழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து சபரிமலை ஐயப்பனை கண்டு தரிசனம் செய்து வருவது வழக்கம் அதே இந்த ஆண்டும் சபரிமலை ஐயப்பனை காண தமிழகத்தில் இருந்து கோடிகணக்கில் பக்தர்கள் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஜோதி தரிசனம்

சேலத்தில் ஸ்ரீ சாஸ்தா சேவா சமிதி குழு சார்பாக முப்பத்தி ஆறாம் ஆண்டு சபரிமலை யாத்திரை வைபவம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த யாத்திரை வைபவம் சேலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் கைலாயதில் இருப்பதை போன்று தத்ரூபமாக அமைக்கபட்டு வலது புறத்தில் விநாயகரும், இடது புறத்தில் முருகபெருமானும் நடுவில் சிவன் பார்வதி அம்ர்திருப்பது போலவும் அமைக்கபட்டு, பின்னர் கங்கை தீர்த்தமானது சிவலிங்கத்தில் ஊற்றுவதை போலவும் சிறப்பாக அமைத்திருந்தனர். பின்னர் வண்ண வண்ண வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன மேலும் சின்முத்திரை தியானத்தில் சபரிமலை ஐயப்பன் அமர்த்திருந்த காட்சி பார்பவர்களை மைசிலிர்க்க வைத்தது.

பின்னர் சபரிமலையில் நடப்பதை போன்று திருஆபரணபெட்டியை பக்தர்கள் சுமந்தவாறு ஊர்வலாமாக கொண்டுவரப்பட்டு தர்மசாஸ்தவிற்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கும் காட்சி நடைபெற்றது. அப்போது சபரிமலை ஐயப்பனின் வரலாற்றை உணர்த்தும் வகையில் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனை போன்று வேடமணிந்து சனிபகவானிடம் பக்தர்களை துன்புறுத்த கூடாது என கூறும் கதையையும் சபரிமலையில் அமர்ந்த கதையும் உணர்த்தும் விதமாக பக்தர்கள் நடித்தது பொதுமக்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தங்க ஆபரணங்கள் அணிவிக்கபட்ட ஐயப்பனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கும் போது பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரிவதை போன்று ஜோதி காண்பித்த போது ஐயப்ப பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்ப என கோஷங்கள் எழுப்பியது மைசிலிர்க்க வைத்தது.

மஹா தீபாராதனை

 

இதனை தொடர்ந்து ஸ்ரீ ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகளும் பஜனைகளும் பாடப்பட்டன பின்னர் ஐநூறுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு குருசாமி இருமுடி கட்டும் வைபவம் நடைபெற்றது பின்னர் வேத வாத்தியம் முழங்க சபரிமலை தர்ம சாஸ்தாவிற்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து சங்கு தாரை பம்பை ஆகியவைகளால் சிறப்பு வாத்திய ஒலியுடன் புஷ்பாஞ்சலி கருப்பண்ண சாமி ஆட்டம் ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அய்யன் அருள் பெற்று சென்றனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து