முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளை மாளிகையில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரத்தின் போது தங்களது தனிப்பட்ட சொந்த செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் அமல்

அதிபர் டிரம்பின் அலுவலக நிர்வாக உதவியாளர்களும் செல்போன் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலர் ஜான் கெல்லி பிறப்பித்துள்ளார். இந்த தடை உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நெட்வொர்க்குடன் இணைப்பு

வெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் ரகசியமாக பத்திரைகளுக்கு செய்திகளாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அதிபர் டிரம்ப் எழுப்பியிருந்தார். அதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ரகசியமாக செய்திகள் வெளியாவதை தடுக்க ஊழியர்களின் செல்போன்கள் வெள்ளை மாளிகையின் வயர்லெஸ் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து