முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டவுன் முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 209 ரன்களுக்கு ஆல்-அவுட் - 2-ம் நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா 65/2

சனிக்கிழமை, 6 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இன்னிங்சில், ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடியால் இந்திய அணி பெரும் சரிவில் இருந்து மீண்டு கவுரவமான ஸ்கோரை எட்டியுள்ளது. எனினும் இந்திய அணி முதல் இன்னிங்சில் 209 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் பின்தங்கியுள்ளது. 2-ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்களை எடுத்த தென்ஆப்பிரிக்க அணி 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

புவனேஸ்குமார்...

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. கேப்டவுனில் நேற்று முன்தினம் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்தது. புவனேஸ்வர்குமார் உள்ளிட்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால், தென் ஆப்பிரிக்கா 286 ரன்களில் சுருண்டது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணியும் தொடக்கத்தில் தடுமாறியது.

இந்தியா திணறல்

முரளி விஜய் 1, தவான் 16, கோலி 5 ரன்களில் நடையை கட்டினர். ரோகித் ஷர்மா 11 ரன்களிலும், புஜாரா 26 ரன்களிலும், அஸ்வின் 12 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இந்திய அணி 81 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் ஹர்திக் பாண்ட்யா திடீரென அதிரடி காட்டி தென் ஆப்பிரிக்க பந்துகளை சிதறடித்தார்.

பாண்ட்யா அபாரம்

டீ பிரேக் நேரத்தில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. பாண்ட்யா 68 பந்துகளில் 81 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். 13 பவுண்டரிகளும் 1 சிக்சரும் விளாசியிருந்தார். இவருக்கு பக்கபலமாக புவனேஸ்வர்குமார் இருந்தார். பின் தொடர்ந்து சிறப்பாக ஆடிய பாண்ட்யா 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின் புவ்னேஸ்குமார் 25 ரன்களுடனும், பும்ரா 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர்.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 73.4 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

142 ரன்கள் முன்னிலை
இதையடுத்து 77 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய தென்ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது. இத்துடன்

2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வர தென் ஆப்பிரிக்க அணி 142 ரன்கள் முன்னிலையுடன் இன்று களமிறங்குகிறது. ரபாடா 2 ரன்னுடனும், ஆம்லா 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து