முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து பயணம்

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 43வது உலக பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 4 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று  காலை சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார். அவருடன் மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, பியூஸ்கோயல், தர்மேந்திர பிரதான், மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் மற்றும் முகேஷ் அம்பானி, ஆசிம்பிரேம்ஜி, ராகுல் பஜாஜ் உள்ளிட்ட தொழில் அதிபர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

இன்றைய தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரேசாமே, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட 130 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒருங்கிணைந்த எதிர்கால நலன்களை உருவாக்குவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. உலக பொருளாதார மாநாட்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் பங்கேற்கிறார். கடைசியாக 1997ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா இந்த மாநாட்டில் பங்கேற்று இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து