முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா ஓபன் ஆண்கள் ஒற்றையர் இறுதி: ரோஜர் பெடரர் - மரின் சிலிச் பலப்பரீட்சை

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பெடரர் அசத்தல்...
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் தரநிலை பெறாத கொரிய வீரர் சங்-ஐ எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பெடரர் முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார்.

இறுதிப்போட்டி...
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் பெடரர் அதிரடி ஆட்டத்தை வெளிகாட்டினார்.  ஆனால் சங் காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து இடையிலேயே விலகினார். இதனால் பெடரர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் - மரின் சிலிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து