இந்திய ஓபன் பாட்மிண்டன்: இறுதிச்சுற்றில் பி.வி.சிந்து!

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2018      விளையாட்டு
PV Sindhu 2017 9 14

புது டெல்லி : இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை போட்டித் தர வரிசையில் 4-ஆம் இடத்தில் இருக்கும் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து எதிர்கொண்டார். இதில் துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, சிறப்பாக செயல்பட்டு 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ரட்சனோக் இன்டனோனை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதையடுத்து இந்திய ஓபன் சூப்பர் 500 உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாங் பீவனுடன் பலப்பரீட்சையில் போட்டியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து