2-வது ஒருநாள் போட்டியில் வெற்றி: சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் கோலி பாராட்டு

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      விளையாட்டு
virat kohli 2018 2 5

செஞ்சூரியன் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து பந்துவீச்சாளர்களுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோலி பாராட்டு...

வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘டாஸ்’ போடுகையில் ஆடுகளத்தை பார்க்கையில் தொடக்கத்தில் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன். இருப்பினும் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் வீழ்த்தி விட்டால் பின்னர் வரும் வீரர்களின் விக்கெட்டை எளிதில் கைப்பற்றி விடலாம் என்பது எங்களுக்கு தெரியும்.


டர்பன் ஆடுகளத்தை விட இது கடினமாக இருந்தது. அதனை சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டனர். மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் நமது சுழற்பந்து வீச்சாளர்கள் நினைத்த திசையில் பந்தை திருப்பினார்கள். அவர்கள் தென்ஆப்பிரிக்க அணியினருக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்கவில்லை. 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருப்பது நல்ல நிலையாகும்’ என்றார்.
கடினமானதாகும்...

தோல்வி குறித்து தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் மார்க்ராம் கூறுகையில், ‘இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. என்னில் இருந்து தொடங்கி விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தது சரியானது இல்லை. நாங்கள் நிர்ணயித்த ரன் இலக்குக்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது கடினமானதாகும். இந்த தோல்வியில் இருந்து நல்ல பாடத்தை கற்றுக் கொண்டதாக கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து