முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம்: முதல்வர் சித்தராமையா அழைப்பு

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர், காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி நீர் பங்கீடு தீர்ப்பு குறித்து விவாதிக்க பெங்களூருவில் வரும் 7-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள காவிரி படுக்கை பகுதி எம்.எல்.ஏக்களும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் பிப்ரவரி 22- ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் வரும்  7-ம் தேதி கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 175.25 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் . காவிரியில் தமிழகத்துக்கு மாதந்தோறும் நீர் வழங்க வேண்டும். 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து