பெட்ரோல் - டீசல் விலை ஏறுமுகம் !

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      வர்த்தகம்
petrol-pumbs 2016 11 9

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆறு தினங்களாக தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை அதிகரித்து வருவதால் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்ததாக கூறப்படுகிறது.

பிராண்டு இல்லாத பெட்ரோல் விலை டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.32 ஆக விற்பனை ஆனது. நேற்று 7 பைசா அதிகரித்து 72.39 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கு விற்பனையான நிலையில், நேற்று ரூ.75.07 ஆக விற்பனையானது. டீசல் விலையை பொறுத்தவரை, டெல்லியில் ஒரு லிட்டர் நேற்று முன்தினம் ரூ.62.89-க்கு விற்பனையானது. நேற்று ரூ. 62.96க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று முன்தினம் சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.66.31 ஆக இருந்தது. நேற்று ரூ.66.39 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து