முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் ஏப்ரல் 2- ம் தேதி முதல் ஹெச்-1பி விசா விண்ணப்பங்கள் வரவேற்பு

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினர் தாற்காலிகமாக தங்கி பணிபுரிவதற்கு அனுமதி அளிக்கும் ஹெச்-1பி விசா விண்ணப்பங்களை, வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்வதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், ஹெச்-1பி விசா கேட்டு 22 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதே காலக்கட்டத்தில் 3 லட்சம் சீனர்கள் ஹெச்-1பி விசா கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், அவர்கள், அமெரிக்காவில் உள்ள தொழில் நிறுவனங்களில் தாற்காலிகமாகப் பணிபுரிவதற்காக, ஹெச் -1பி விசா வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2018-ஆம் நிதியாண்டுக்கான விண்ணப்பங்களை, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்வதாக அமெரிக்க குடியேற்ற சேவைகள் அமைப்பு (யுஎஸ்சிஐஎஸ்) தெரிவித்துள்ளது. இதேபோல், 2019-ஆம் நிதியாண்டுக்கான விசா விண்ணப்பங்களை, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்வாதகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து