முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: ஐதராபாத் அணியில் வார்னருக்கு பதிலாக ஹேல்ஸ் இடம் பிடித்தார்

சனிக்கிழமை, 31 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ளார்.

7-ம் தேதி தொடக்கம்

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வருகிற 7-ம் தேதி (ஏப்ரல்) மும்பையில் தொடங்குகிறது. ஐ.பி.எல். தொடரில் விளையாடும் 8 அணிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஒன்று. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் விலகினார். அதோடு தடை காரணமாக ஐ.பி.எல்.லிலும் அவர் ஆடமுடியாது.

அலெக்ஸ் ஹேல்ஸ்... 

இந்நிலையில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் இடம் பிடித்துள்ளார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியூசிலாந்தை சேர்ந்த கேன் வில்லியம்சன் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து